எம்மைப் பற்றி…

“தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்”

தாயக மண்ணிலிருந்து உலகமெல்லாம் இசைகொண்டு வரும் உலகத்தமிழர் வானொலி , புதிய ஆண்டில் உங்களை மகிழ்வோடு சந்திக்கிறது.

உலகெங்கும் வாழும் எம் தமிழ் உறவுகளை இணையத்தினூடாக ஒன்றினைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட இணையத்தள வானொலி இதுவாகும்.

எமது இளமைத் துடிப்புள்ள அறிவிப்பாளர் குழாமின் கடும் உழைப்போடு, காற்றாலை எங்கும் வண்ண வண்ண கனவுகளை நிரப்புகிறோம்

வாழும் இடம் மற்றும் மதம் போன்ற எந்தவொரு பாகுபாட்டினாலும் வேறுபடுத்த முடியாதவாறு நாம் அனைவரும் தமிழர் என்ற ஒரே நோக்கத்தோடு ஒன்றுபட வேண்டும் என்பதே இந்த வானொலி அமைப்பாளர்களின் ஒரே எண்ணமாகும்.

மேலும், அந்த இரசனையிகளின் அடிப்படையில் தான் எமது நிகழ்ச்சிகள் உங்களுக்காக வந்து சேர்கின்றன என்பது எமக்குப் பெருமையே

ஐக்கிய இராட்சியத்தில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் இந்த வானொலிச் சேவையானது, 24 மணிநேரமும் தாயகத்திலிருந்து நேரடியாக ஒலிபரப்புச் செய்யப்படுகின்றது.

“தமிழே வாழ்க தமிழ் அன்னையே வாழ்க”